தமிழ் சினிமாவின் பிரபல தம்பதிகளில் ஒருவர்களாக இருப்பவர்கள் தான் அஜித்- ஷாலினி. அமர்க்களம் படத்தில் மூலமாக இணைந்து நடித்தார்கள். அதன் பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் ஷாலினி அறிமுகமானார். அப்போதே ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருந்தார். இவர் பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பின் மீது ஆர்வம் காட்டவில்லை.
சினிமாவிலிருந்து விலகி குடும்பத்தின் மீது முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். இந்நிலையில் அஜித் நடித்துவரும் குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரோடு ஸ்பெஷல் ஜோடி போட்டு நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் படத்தில் வரும் ஒரு காட்சியின் அதே பேக்ரவுண்டில் அஜித்தோடு ஷாலினி இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வருகிறது. இது நடக்கும் பட்சத்தில் இந்த ஜோடி 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையில் சேர்வது குறிப்பிடத்தக்கது.