அஸ்வத் மாரிமுத்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வனை வைத்து ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் அஸ்வத் மாரிமுத்து.
ஓ மை கடவுளை திரைப்படம் வித்தியாசமான கதைகளத்தை கொண்டிருந்ததால் முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அஸ்வத் மாரிமுத்து. அதை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஓரி தேவுடா என்ற பெயரில் தெலுங்கில் அப்படத்தை ரீமேக் செய்தார்.
தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் என்ற திரைப்படத்தை இயக்கி அது திரையரங்குகளில் வெளியாகி மிகவும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. யாரும் எதிர்பாராத விதமாக லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டிராகன் திரைப்படம் மிகவும் அருமையாக இருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் அஸ்வத் மாரிமுத்து ஒரு நேர்காணலில் விஜயை பற்றி கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், ஒருவேளை விஜய் சார் நான் சினிமாவில் தொடர்ந்து நடிக்கிறேன் என்று கூறிவிட்டால் அவரது வீட்டில் முன்னால் நிற்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். அவருடன் படம் பண்ண வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய ஆசை. அது நடந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று ஓபனாக கூறியிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து.