முதல்முறையாக தனது திருமணத்தை பற்றி பேசிய மணிகண்டன்… என்ன இப்படி சொல்லிட்டாரு…
Tamil Minutes February 27, 2025 01:48 AM

மணிகண்டன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலமான நடிகராவார். ஆரம்பத்தில் பாய்ஸ், காதல் எப்எம், கிச்சா வயது 16 போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் மணிகண்டன்.

அதை தொடர்ந்து மணிகண்டன் குட் நைட் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்தார். தற்போது குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படமும் வெற்றி பெற்றது.

மணிகண்டனின் நடிப்பு பக்கத்து வீட்டு பையன் போல் மிகவும் எதார்த்தமாக இருப்பதால் மக்கள் ஈசியாக அவருடன் கனெக்டாக முடிந்தது. மேலும் இவரது படங்கள் நடுத்தர குடும்பத்தின் சூழ்நிலைகளை எடுத்துக் கூறுவது போல் இருப்பதால் அனைவரும் இவரது படத்தை விரும்பி ரசிக்க தொடங்கி இருக்கின்றனர். இவரது படம் அடுத்ததாக எப்போது வரும் என்று மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் மணிகண்டன்.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட மணிகண்டன் தனது திருமணத்தை பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், நான் சினிமாவில் இன்னும் நிறைய பயணிக்க விரும்புகிறேன். திருமணத்திற்கான ஒரு திட்டமிடல் என்னிடம் இல்லவே இல்லை. நான் அதற்காக மனது ரீதியாகவும் தயாராகவில்லை. அதனால் திருமணத்தை பற்றி இப்போது நான் துளி அளவு கூட யோசிக்கவில்லை என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் மணிகண்டன்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.