நயன்தாரா சிவகார்த்திகேயனை பற்றி நான் அன்றைக்கே சொன்னேன்… யாருமே நம்பல… செல்வராகவன் ஓபன் டாக்…
Tamil Minutes February 27, 2025 01:48 AM

செல்வராகவன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவரது தந்தை கஸ்தூரிராஜா தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் இவரது சகோதரர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் இருந்து வருகிறார்.

2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் எழுத்தாளராக பணிபுரிந்தார் செல்வராகவன். அதற்கு அடுத்து 2003 ஆம் ஆண்டு காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தை தனது சகோதரர் தனுஷை நடிக்க வைத்து இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் செல்வராகவன். அதை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு 7ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படத்தை எடுத்தார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கி இருக்கிறார் செல்வராகவன். அது தவிர சமீபத்திய காலங்களில் இவரது நடிப்புக்கு மிகுந்த வரவேற்பு இருந்து வருவதால் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் செல்வராகவன். ராயன் திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்நிலையில் செல்வராகவன் நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயனை பற்றி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் ஐயா படம் பார்த்தபோது நயன்தாரா மிகப் பெரிய நடிகையாக வருவார் என்று நான் கூறினேன். அதை என் தம்பி கூட நம்பவில்லை. அதேபோல் எதிர்நீச்சல் படம் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனும் பெரிய ஹீரோவாக வருவார் என்று கூறினேன். அப்போது நான் கூறியதை யாருமே நம்பவில்லை. ஆனால் இப்போது நான் கூறியபடியே நயன்தாராவும் சிவகார்த்திகேயனும் டாப் நடிகர்களாக இருக்கிறார்கள் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் செல்வராகவன்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.