கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் அறிவித்தது. அந்தப் போரில் இதுவரை ரூ.5.45 லட்சம் கோடி அமெரிக்கா ரஷ்ய ராணுவத்திற்கு உதவி செய்திருக்கிறது.பைடன் போன பிறகு ட்ரம்ப் புதிய அதிபராகப் பொறுப்பேற்றார். அவர் இழந்த பணத்தை இரு மடங்காக வசூலிக்க உக்ரைனில் உள்ள கனிம வளங்களைச் சுரண்ட திட்டமிட்டுள்ளார். ஏனென்றால் உக்ரைன் கனிம வளங்களைச் சுரண்டுவதன் மூலம் ரூ.41.5 லட்சம் கோடியைக் கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கிறார். மேலும் இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாளை முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுகிறார். அமெரிக்கா வந்து ட்ரம்பைச் சந்திக்கும் அவர் கையெழுத்து போடுவதன் மூலம் ரஷ்யாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்று நம்புகிறார்.மேலும் நீண்ட கால பாதுகாப்பு உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் என்றும் ஜெலன்ஸ்க்கி தெரிவிக்கிறார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி:
இதற்கான காரணம் உக்ரைன் ரஷ்யாவுக்குப் பக்கத்து நாடு. இது நேட்டோவுடன் சேர முயன்றது. அப்படி நடந்தால் உக்ரைன் ரஷ்யா எல்லையில் நேட்டோ படைகள் நிலை நிறுத்தப்படும். இது ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல். இதன் காரணமாகத்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யா உடனான போரை நிறுத்துகிறேன் என்று கூறி உக்ரைனின் அரிய வகைக் கனிமங்களை வெட்டி எடுக்கவும் அதன் மூலம் வரும் லாபத்தைப் பிரித்துக் கொள்ளவும் கணக்கு போட்டிருக்கிறார். இதற்கான ஒப்பந்தத்தில் நாளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்து போடுகிறார். இந்த ஒப்பந்தத்தினால் அமெரிக்காவுக்கு 500 பில்லியன் டாலர்ஸ் லாபம் கிடைக்கும். இதனைக் காரணம் காட்டி அமெரிக்கா உக்ரைன் கனிம வளக் கொள்ளையில் இறங்கி இருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.