மதுரை மாநகராட்சியில் வீட்டில் விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிப்பு..!
Top Tamil News February 28, 2025 01:48 PM

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும், ஒரு முன்மாதிரி திட்டமான வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு கட்டணம் விதித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் படி  வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

விலங்குகள் வளர்க்க கட்டணம்- மதுரை மாநகராட்சி

மாடு வளர்க்க ரூ.500 கட்டணம், குதிரை வளர்க்க ரூ.750 கட்டணம், ஆடு வளர்க்க 150 ரூபாயும் பன்றி வளர்க்க 500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் அதிகளவு செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய், பூனை போன்றவற்றை வளர்க்க 750 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல மற்றி பிரியாணிகளுக்கு வளப்பதற்கு உரிமை தொகை கட்ட வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

புதிய கட்டணம் எப்போது அமல்

ஏற்கனவே செல்லப்பிராணிகள் வளர்க்க 10 ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே மதுரை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பொதுமக்கள் மத்தியில் கருத்து கேட்கப்பட்ட பிறகு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கட்டண வசூல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.