கூகுள் சேர்ச் எஞ்சின் என்பது, உலகில் உள்ள எந்த தகவலையும் பெற உதவ வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது “Ask For Me” என்ற புதிய சேவையை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
AI தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படும் இந்த சேவை, கூகுள் பயனாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட எந்தவிதமான தகவல்களையும் விசாரித்து தெரிந்துகொள்ள உதவுகிறது.
குறிப்பாக, உங்கள் அருகில் உள்ள பகுதியில் ஒரு கடையில் பொருள் வாங்க வேண்டும் அல்லது அந்த நிறுவனத்தின் சேவை தேவைப்படும் என்றால், அதற்காக நீங்கள் அந்த கடைக்கு நேரடியாக போன் செய்ய தேவையில்லை. அதற்கு பதிலாக, கூகுளில் உள்ள “Ask For Me” என்ற ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், உங்களுக்காகவே கூகுள் அந்த கடைக்கு போன் செய்து, தேவையான விவரங்களை கேட்டு, பதிலாக வழங்கும்.
இதன் மூலம், ஒரு சேவையை பெறவோ அல்லது ஒரு நிறுவனத்தின் தகவலை பெறவோ, கூகுளில் சர்ச் செய்து அதில் விவரங்களை பெற்று, அதன் பிறகு நேரடியாக போன் செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. “Ask For Me” சேவையின் மூலம், ஒரே நிமிடத்தில் இந்த தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
தற்போது, சோதனை அடிப்படையில் சில பயனர்களுக்கு மட்டும் இந்த சேவையை கூகுள் வழங்கி வருகிறது. மேலும், இன்னும் சில மாதங்களில், அனைவருக்கும் இந்த சேவை நீடிக்கப்பட இருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது.