பொதுவாக பாசி பயறு நம் உடலுக்கு நிறைய நன்மைகளை வாரி வழங்குகிறது .இப்பதிவில் பாசிபயரின் ஆரோக்கியம் குறித்து நாம் காணலாம்
1.இந்த பயறு குழந்தைகளின் நினைவு திறனை மேம்படுத்த உதவுகிறது .வல்லாரை கீரையுடன் இந்த பாசி பயறை சேர்த்து கொடுத்தால் போதும் நல்ல ஞாபக சக்தி கிடைக்கும் .
2.இந்த பயறை மணத்தக்காளி கீரையுடன் கொடுத்தால் உடல் உஷ்ணம் குறைந்து மூல நோயை உண்டாக்கும் மல சிக்கலை குணப்படுத்துகிறது .
3.பாசி பயறை வேக வைத்து அந்த தண்ணீரை சூப்பு போல குடித்தால் வயிறு கோளாறுகள் குணமாகும் 4.மேலும் ரத்த அழுத்தம் ,ரத்த சோகை ,நீரிழிவு ,போன்ற நோய்களை குணப்படுத்தும் இந்த பயறு நம் முடி வளர்ச்சிக்கும் பேருதவி புரியும் .மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்
5. உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் உணவில் பாசி பயறை சேர்த்து கொள்ளலாம். இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
6.கர்ப்பிணிகளுக்கு தேவையான ஃபோலேட்டுகள் பாசி பயறில் வளமான அளவில் உள்ளன. 100 கிராம் பாசி பயறு தினமும் உட்கொள்ள வேண்டிய ஃபோலேட் அளவில் 40% பூர்த்திசெய்கிறது. எனவே பாசி பயறினை அடிக்கடி உண்டு கர்ப்பிணிகள் தங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.