பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்தே எனது கருத்து…. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…!!
SeithiSolai Tamil March 09, 2025 09:48 AM

நெல்லையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணையுமா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதற்கு பதில் அளித்து விட்டார். மீண்டும் மீண்டும் கூட்டணி கட்சியில் உள்ள நாங்கள் அதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை.

அம்மாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் 2026 இல் ஒருங்கிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டால், உறுதியாக தீய சக்தி திமுகவை வீழ்த்த முடியும். அம்மாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு தெரியும். அதில் ஒரு சிலர்தான் தடையாக இருக்கிறார்கள் என்பது தெரியும். வருகிற 2026 இல் திமுக கட்சி தொடரக் கூடாது என்பதை விரும்புபவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் வலுவான கூட்டணி, ஆதலால் எங்களுக்கு அவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.