நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு சுகரை குறைக்கும் இந்த அரிசி
Top Tamil News March 07, 2025 10:48 AM

பொதுவாக அந்த காலத்தில்  மாப்பிள்ளை சம்பா அரிசியை ஆண்களுக்கு சமைத்து கொடுப்பார்கள் .அதனால்தான் அவ்வளவு வலு கொடுக்கும் அந்த அரிசிக்கு மாப்பிள்ளை சம்பா அரிசி என்று பெயர் வந்தது.இதன் நன்மை குறித்து நாம் இப்பதிவில் காணலாம்  .
1.இந்த அரிசியில் ஏராளமான இரும்பு சத்து அடங்கியுள்ளது .
2.இந்தரிசி நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது .
3.மேலும் கேன்சர் வராமல் தடுத்து ,நல்ல இம்மியூனிட்டி பவர் கொடுக்கிறது .


4.தீராத வயிற்று வலி மற்றும் அல்சருக்கு இந்த அரிசியின் வடித்த கஞ்சியில் சீரகம் ,மிளகு சேர்த்து குடித்தால் அந்த நோய்கள் பறந்து போகும்
5. மாப்பிள்ளை சம்பா அரிசி நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. மாப்பிள்ளை சம்பா அரிசியில் வளமான அளவில் நார்ச்சத்து உள்ளதால் நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு, நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது.
6.ஆண்களுக்கு உடல் பலத்தை அதிகரிக்கவும், ஆண்மை குறைபாடு பிரச்சனையை போக்கவும் மாப்பிள்ளை சம்பா அரிசி உதவுகிறது.
7.மாப்பிள்ளை சம்பா அரிசியை தினமும் உணவில் சேர்த்துகொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் தொற்று உண்டாகும் கிருமிகளை அழித்து நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
8.இந்த அரிசி சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக இருக்க உதவுவதோடு, நரம்புகளுக்கும் வலு கொடுக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.