FLASH: பிரதான் அவர்களே…! முடியுமா, முடியாதா…? அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க…. சீறிய முதல்வர் ஸ்டாலின்….!!
SeithiSolai Tamil March 10, 2025 05:48 PM

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமுக மற்றவர்கள் ஜனநாயக விரோதமானவர்கள் என பேசி சர்ச்சையில் சிக்கினார். அதற்கு திமுக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனால் தர்மேந்திரா பிரதான் பேசிய வார்த்தையை திரும்ப பெறுவதாக கூறினார். இதனையடுத்து பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழ்நாடு அரசு முதலில் விருப்பம் தெரிவித்தது. கடைசியில் யூ-டர்ன் அடித்து விட்டனர். பிஎம்ஸ்ரீ தட்டத்தில் சேர தமிழக முதல்வர் முன்வந்தார். ஆனால் சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார்.

சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்து போட மறுத்து விட்டனர். யார் அந்த சூப்பர் முதல்வர்? என கேள்வி எழுப்பினார். ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்! தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். மாண்புமிகு பிரதமர் அவர்கள் இதனை ஏற்கிறாரா?

NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே? பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல. நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.