ஆந்திர நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் கோவை ஸ்ரீ அன்னபூர்ணா ஃபுட்ஸ்.... வருவாயை ரூ.1,000 கோடியாக உயர்த்த அதிரடி திட்டம்...
ET Tamil March 10, 2025 08:48 PM
ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் முன்னணி சூரியகாந்தி எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான ஜெமினி எடிபிள்ஸ் அண்ட் ஃபேட்ஸ் இந்தியாவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக கோவையை சேர்ந்த மசாலா பிராண்ட் ஸ்ரீ அன்னபூர்ணா ஃபுட்ஸ் தெரிவித்துள்ளது. கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்ரீ அன்னபூர்ணா ஃபுட்ஸ் நிறுவனம் பல வகையான மாசலா பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தமிழகம் மட்டும் இல்லாமல் தென் இந்தியா முழுவதும் மஆகியவை மசாலா பொருட்களை விற்பனை விரிவாக்கம் செய்வதான ஒரு கூட்டு முயற்சியை தொடங்கியுள்ளன.இதன்படி ஜெமினி எடிபிள்ஸ் அண்ட் ஃபேட்ஸ் இந்தியா நிறுவனம் ஸ்ரீ அன்னபூர்ணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் முதல்கட்டமாக ரூ.70 கோடி முதலீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து பேசிய, ஸ்ரீ அன்னபூர்ணா நிர்வாக பங்குதாரர் விஜய் பிரசாத், ஆந்திராவில் ஒரு நாளைக்கு 100 டன் உற்பத்தி திறன் கொண்ட ஒரு உற்பத்தி வசதி நிறுவப்படும் என்று தெரிவித்தார். ஏனெனில் மசாலா உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைக்கும் சந்தைக்கு அருகிலேயே உற்பத்தி ஆலையும் இருக்கும் போது வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார். மேலும் தற்போது கோவையில் ஒரு நாளைக்கு 30 டன் உற்பத்தி திறன் கொண்ட ஆலை உள்ளதாகவும், இதில் 45%-50% பயன்படுத்தப்படுகிறது. மசாலா பொருட்கள் மற்றும் ரெடி டூ ஈட் உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. இந்த சந்தையை தங்கள் வசப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் கோவை மட்டும் இல்லாமல் இதர பகுதிகளிலும் விற்பனையை அதிகரிக்கவும், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். ஏனெனில் ஜெமினி எடிபிள்ஸ் நிறுவனத்துக்கு ஆந்திராவில் சிறந்த பங்களிப்பு உள்ளது. எண்ணெய் விற்பனையில் உள்ள இந்த சந்தையை மசாலாவுக்கு கொண்டுவருவதற்கான் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என விஜய்பிரசாத் தெரிவித்தர். மேலும் அன்னப்பூர்ணா ஃபுட்ஸ் நிறுவனத்தின் வருமானம் ரூ.45 கோடியாக உள்ளது என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பிராண்டட் மசாலா சந்தையை CY2032 ஆம் ஆண்டுக்குள் தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட ரூ.96,500 கோடி சந்தை அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.