சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் வேடமிட்டு 23 வயது வாலிபருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் பிக்பாஸ் விக்ரமன் என்றும் அவரை பிடித்தவர்களை மிரட்டி அந்த வீடியோவை நீக்க பணம் கொடுத்தார் என்றும் வீடியோ ஒன்று வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இது படத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ என்று விக்ரமன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விக்ரமன் குறித்து தவறான தகவலை பரப்பியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு அவருடைய மனைவி பிரீத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் முன்பு நான் குடியிருந்த வீட்டில் ஷூட்டிங் தொடர்பாக வீடியோ ஒன்றை எடுக்க வேண்டியதாக இருந்தது.
நான் வெளியூரிலிருந்த போது ஷூட்டிங்கிற்காக எடுத்த வீடியோ. அந்த வீடியோவை தேவை இல்லாமல் டேக் செய்து அவதூறு பரப்பி இருக்கிறார்கள். அவதூறு பரப்பியது யார் என்று புகார் கொடுக்க வந்தேன். ஷூட்டிங் இல்லை ஷூட்டுக்காக டெஸ்ட் வீடியோஎடுத்தோம். இது நான் மதுரையில் இருந்தபோது அவரே ஷூட் செய்து அனுப்ப சொன்னேன். அப்போது எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. கல்யாணமாகவில்லை. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நான்தான் வசித்து வந்தேன். அது என் வீடு. விக்ரமனின் வீடு இல்லை.
நான் ஊருக்கு போனால் ரிலாக்ஸ் செய்வதற்ககாக அவர் நான்கு நாட்கள் அங்கு வந்து தங்கி இருந்தார். என் படத்தில் அவர் வேலை செய்வதாக இருந்தது. அதனால் பணத்திற்காக அப்படி நடிக்கச் சொன்னேன். ஸ்கிரீனில் உங்களால் அப்படி நடிக்க முடியும் என்றால் உடனே ஷூட் செய்து அனுப்புங்கள் என்றேன். அதற்காக அவர் அந்த வீடியோவை செய்தார். நான் விளையாட்டாக சொன்ன விஷயத்தை சீரியசாக எடுத்துக் கொண்டு நடித்தார். இது நடந்து ஆறு ஏழு மாதங்கள் ஆகிவிட்டது. இதை தற்போது பிரச்சினையாக்கிய நபரை நான் பார்த்ததே இல்லை. நாங்கள் அந்த வீட்டை காலி செய்து விட்டோம்” என்று கூறியுள்ளார்.