செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் சிப்காட்டில், கோத்ரேஜ் ஆலையில் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் உரையாற்றினார்.
அதில் அவர் கூறியதாவது," நான் வரலாற்று சிறப்புமிக்க கோத்ரேஜ் நிறுவனத்தின் அதிகாரிகள் அனைவரையும் தமிழ்நாட்டிற்கு வரவேற்கிறேன்.இந்த கோத்ரேஜ் நிறுவனத்தை தமிழகத்தில் நிறுவியது எனக்கு 2 மடங்கு மகிழ்ச்சி தருகிறது.கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட ஒரு வருடத்திலேயே கோத்ரேஜ் நிறுவனம் திறந்துவைக்கப்பட்டுள்ளது எனக்கு பெருமை.
இந்தியாவில் மட்டுமல்ல தெற்கு ஆசியாவிலேயே தொழில் தொடங்க ஏற்ற மாநிலம் தமிழ்நாடு தான்.நேர்மறையான சிந்தனைகள் எப்போதும் வெற்றியில் தான் முடியும்.முதலீட்டாளருக்கு தேவையான அனைத்து ஆதரவு சேவையையும் தி.மு.க. அரசு செய்து வருவதால் பெரும் முதலீடு ஈர்ப்பு.
கோத்ரேஜ் நிறுவனம் தனது ஆலையில் 50 % பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது.மேலும் திருநங்கைகளுக்கு கோத்ரேஜ் நிறுவனத்தில் பணி வழங்கியமைக்கு மனதார நன்றி கூறுகிறேன்.உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முகவரி என அறிவித்த கோத்ரேஜ் நிறுவனத்திற்கு நன்றி.தமிழகத்தில் 4-ம் தலைமுறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அதிநவீன திட்டம்.
இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்றுவது அனைவரும் அறிந்ததே. சென்னையின் நுழைவு வாயிலான செங்கல்பட்டை போல் இந்தியாவின் பொருளாதார முதலீட்டின் நுழைவுவாயிலாக தமிழகம் உள்ளது. சாதகமான வணிக சூழல் நிலவும் தமிழகத்தில் உங்கள் திட்டங்களை தங்குதடையின்றி செயல்படுத்தலாம்" எனத் தெரிவித்தார். மேலும் இது குறித்து எதிர் கட்சியினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.