மத்திய கல்வி அமைச்சர் உருவபொம்மை எரிப்பு..பெரியகுளம் திமுகவினர் போராட்டம்!
Seithipunal Tamil March 11, 2025 05:48 AM

 நாடாளு மன்றத்தில் தமிழக எம்பிக்களையும் ,தமிழக மக்களையும் மரியாதை குறைவாக பேசிய  பாஜக ஒன்றிய கல்விஅமைச்சரை கண்டித்து  பெரியகுளம் திமுக சார்பில்  தர்மேந்திரபிரதான் உருவபொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் நிதி வழங்கப்படாது என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியது சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் இன்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசுகையில், "தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக தவறாக பரப்புரை செய்யப்படுகிறது என்றும் தமிழக மாணவர்களை தி.மு.க. அரசு வஞ்சிக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தையும் மாநில அரசு பாழடிக்கிறது என பேசினார்.

உடனடியாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானின் பதிலை ஏற்க மறுத்து தி.மு.க. எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம் எழுப்பினர். இதையடுத்து  மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. அதோடு 'அநாகரீகமானவர்கள்' என்ற வார்த்தையை தர்மேந்திர பிரதான் கூறியதற்கு தி.மு.க. எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 
 
இந்தநிலையில் நாடாளு மன்றத்தில் தமிழக எம்பிக்களையும் ,தமிழக மக்களையும் மரியாதை குறைவாக பேசிய  பாஜக ஒன்றிய கல்விஅமைச்சரை கண்டித்து திமுக பெரியகுளம் நகர செயலாளர் கே. முகமது இலியாஸ் அவர்களின் தலைமையில் உருவபொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நகர் கழக அவைத் தலைவர் வெங்கடாசலம் . நகர் கழக துணைச் செயலாளர்கள் சரவணன். சேதுராமன். நகர பொருளாளர் சுந்தரபாண்டியன் மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கார்த்திக். அயலக அணி துணை அமைப்பாளர் பாசித்ரகுமான். நாகலிங்கம்-வார்டு செயலாளர்கள் - முத்துப்பாண்டி- விஸ்வநாதன் .பாலு- கரிகாலன் - வக்கில் குணா உள்ளிட்டவார்டு செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு தமிழக எம்பிகளை மரியாதை குறைவாக பேசிய ஒன்றிய அமைச்சரை கண்டித்து கோஷங்கள் எழுப்பி அவருடைய உருவப் பொம்மையை எரித்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.