கரூரில் கல்லூரி மாணவி கடத்தல்; மூன்று தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை..!
Seithipunal Tamil March 11, 2025 07:48 AM

கரூரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவி பேருந்தில் இருந்து இறங்கி சக மாணவிகளுடன் கல்லூரிக்கு நடந்து சென்ற போது மர்ம நபர்கள் ஆம்னி வேனில் வந்து மாணவியை கடத்தியுள்ளனர். இதுகுறித்து, சக மாணவிகள் மற்றும் அங்கிருந்த பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பக்கத்து ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குறித்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சம்பநாளில் இவர்  நண்பர்களுடன் வந்து மாணவியை கடத்தியதாக கூறப்படுகிறது. மாணவியை கடத்திய ஆம்னி வேன் கரூர்- திண்டுக்கல் மாவட்ட எல்லையான வெள்ளோடு பகுதியை கடந்து சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், கல்லூரி மாணவி ஆம்னி வேனில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக எஸ்.பி. உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.