இதெல்லாம் ரொம்ப தப்பு…! கர்ப்பிணி பெண்களிடம் பணத்தை வாங்கி…. குற்றச் செயலில் ஈடுபட்ட செவிலியர் டிஸ்மிஸ்… அதிரடி உத்தரவு…!!
SeithiSolai Tamil March 11, 2025 11:48 PM

சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்தமிழ், தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலையம் கலைமணி ஆகியோர் ஸ்கேன் சென்டர் நடத்தியுள்ளனர். அவர்கள் கர்ப்பிணி பெண்களிடம் தலா 15 ஆயிரம் ரூபாய் பணத்தை வசூல் செய்து கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தி அந்த ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரசு மருத்துவர் முத்தமிழ், செவிலியர் கலைமணி, 6 இடைத்தரகர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் குற்ற செயலில் ஈடுபட்ட அரசு மருத்துவர், செவிலியர் அவர்களுக்கு உடந்தையாக இருந்த கிராம சுகாதார செவிலியர்கள் அம்பிகா வனிதா, வசந்தி, மங்கை, ராணி, கலைச்செல்வி மகேஸ்வரி ஆகிய 8 பேரை பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலைமணியை நிரந்தர பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.