தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத், ஹப்சிகுடா பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர் ரெட்டி. இவர் அங்குள்ள நாராயண கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் சந்திரசேகருக்கு கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.
சந்திரசேகரின் மனைவி கவிதா. இவர்களுக்கு ஸ்ரீதா ரெட்டி என்ற மகளும், விஸ்வன் ரெட்டி என்ற மகனும் உள்ளனர். இதில் 14 வயதாகும் ஸ்ரீதா 9ம் வகுப்பும் சிறுவன் விஸ்வன், 5 ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 6 மாதமாக நிதிச்சுமையில் தவித்து வந்த குடும்பத்தினர், வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அனைவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.