அரிய வகை மரபியல் நோயால் பாதிக்கப்பட்ட லக்சம்பர்க் நாட்டின் இளவரசரான பிரெட்ரிக் உயிரிழந்துள்ளார். அவரது தந்தை இளவரசர் ராபர்ட் இதனை உறுதி படுத்தியுள்ளார்
உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான குட்டி நாடு லக்சம்பர்க். ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இந்த நாட்டின் இளவரசர் பிரெட்ரிக், அரிய வகை நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இது பற்றி அவரது தந்தையும், இளவரசருமான ராபர்ட் தனது சமூக ஊடகப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். மார்ச் 01-ந் ம் தேதி அவர் பாரிசில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
22 வயதான இளவரசர் பிரடெரிக், கடந்த 2022-இல் அரிய வகை நோய்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யும் வகையில் போல்க் என்னும் அறக்கட்டளையை உருவாக்கினார். அவருக்கு ஏற்பட்ட மரபியல் நோய் காரணமாக மூளை, நரம்புகள், தசைகள் மற்றும் கல்லீரல், கண்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நோய்க்கு இதுவரை சிகிச்சை முறை இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.