பாகிஸ்தான் நாட்டில் பலூச் விடுதலை இயக்கம் எனும் பெயரில் செயல்படும் கிளர்ச்சியாளர்கள் பயணிகள் ரயிலை கடத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குவெட்டாவில் இருந்து பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த ரயிலை கிளர்ச்சியாளர்கள் கடத்தியுள்ளனர்.
ரயிலை கடத்தியபோது ஏற்பட்ட மோதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 6 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயிலை மீட்க பாகிஸ்தான் ராணுவம் முயற்சித்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என பலூச் விடுதலை இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ரயிலை மீட்க முயற்சி நடைபெற்றால் பயணிகள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என பலூச் விடுதலை இயக்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.