அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் உடனடியாக தேர்வு நடத்தி காலியாக உள்ள அரசு பணியிடங்களை குறித்த காலத்தில் நிரப்ப வேண்டும்.
மேலும் சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு தற்காலிக ஆலோசகராக பணிபுரிவதற்கு தலைமைச் செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் வந்துள்ளது. இவ்வாறு காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்பாமல் ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துவதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.