தி.மு.க எம்.பிக்கள் அமளி!!! நாடாளுமன்ற மக்களவை மாநிலங்களவையில்...!
Seithipunal Tamil March 12, 2025 12:48 AM

மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே மும்மொழி கல்வி கொள்கைக் காரணமாக கடுமையான மோதல் ஏற்பட்டுவருகிறது.இந்தப் பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது. இதில் இந்தப் பிரச்சினை புயலாகக் கிளம்பியது .

தி.மு.க எம்.பி.க்கள் மாற்றும் மத்திய கல்வி மந்திரி இடையே விவாதம் நடந்தது. அப்போது திமுக எம்.பி.க்கள் நேர்மையாக இல்லை. மேலும் ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கிறார்கள். நாகரிகமற்றவர்கள் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

இவர் கருத்துக்கு தி.மு.க. மற்றும் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிலர் அவையின் மையப்பகுதிக்குச் சென்று கோஷமிட்டனர்.இதன்நடுவே மத்திய மந்திரிக்கு எதிராக தி.மு.க எம்.பி. கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.

மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானின் பேச்சிக்குக் கண்டனம் தெரிவித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கருப்பு உடை அணிந்து, பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதனையடுத்து நாடளுமன்ற இரு அவைகளும் தொடங்கியது.

தொடக்கத்திலிருந்தே மக்களவையில், திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.மேலும் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினர். அதைபோல தொகுதி சீரமைப்பு, கல்வி நிதி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த நோட்டீஸ் மீது விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது , இதனால் மாநிலங்களவையிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இது தற்போது பெரும் பேசுபொருளாக இந்தியாவில் மாறிவிட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.