தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு, ஆணவத்துடன் பேசும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்..
நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்களை பார்த்து 'அநாகரீகமானவர்கள்' என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டித்துள்ளார். மேலும், "மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தன்னை மன்னரென எண்ணிக்கொண்டு ஆணவத்துடன் பேசுகிறார்.
தமிழ்நாடு மக்களை அவமானப்படுத்தும் வகையில் 'தமிழ் எம்.பி.க்கள் அநாகரிகமானவர்கள்' என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதை பிரதமர் மோடி ஏற்கிறாரா?
பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல
நிதியை தராமல் ஏமாற்றுபவர்கள், தமிழ்நாட்டு எம்பிக்களை பார்த்து அநாகரீகமானவர்கள் என்பதா?" என கொந்தளித்துள்ளார்.
தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா? என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!"
தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் Dharmendra Pradhan அவர்களுக்கு நாவடக்கம்...
Posted by on