கன்னியாகுமரி மாவட்டத்தை நெருங்கும் கோடை மழை..வானிலை முன்னறிவிப்பு!
Seithipunal Tamil March 11, 2025 05:48 AM

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் நாளை ,செவ்வாய், நாளை மறுநாள் புதன் ஆகிய நாட்களில் அநேக இடங்களில் கோடை மழை வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தெற்கே இலங்கை மற்றும் அதனை ஒட்டிய   கன்னியாகுமரி மாவட்டத்தின் இந்திய பெருங்கடல் வழியாக நகர இருக்கும்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் நாளை ,செவ்வாய், நாளை மறுநாள் புதன் ஆகிய நாட்களில் அநேக இடங்களில் கோடை மழை வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும்  தற்போது அதிகாலை நிலவரப்படி இந்த மேலடுக்கு சுழற்சி இலங்கை அதற்கு தென்கிழக்கு திசையில் இந்திய பெருங்கடலில் சுழன்று வருகிறது, இனி அடுத்து வரக்கூடிய நேரத்தில் அதாவது இன்று திங்கட்கிழமை மாலை முதல் நள்ளிரவுக்குள் இது  கன்னியாகுமரி மாவட்டத்தை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் வர ஆரம்பிக்கும்,மேலும்  மேற்கு நோக்கி நகர்ந்து வர இருக்கிறது  இதனால் இன்று திங்கட்கிழமை நள்ளிரவில் நாளை செவ்வாய் கிழமை அதிகாலை நேரத்தில் காற்று திசை மாற்றம் துவங்க உள்ளது.

  கிழக்கு, தென்கிழக்கு திசையில் இருந்து ஈரப்பதம் மிகுந்த கடல் காற்றை கன்னியாகுமரி மாவட்டத்தில் கொண்டு வந்து நாளை செவ்வாய்க்கிழமை பெரும்பாலான இடங்களில் நமக்கு மழை பொழியும்   சில இடங்களில் புதன்கிழமை 12 ஆம் தேதி கனமழை வரை 'சமவெளி பகுதியில் கிடைக்கும் வாய்ப்பு புதன்கிழமை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது, இது இந்திய பெருங்கடல் வழியாக  கடந்து மாலத்தீவை கடந்து  அரபிக்கடல் பகுதிக்கு வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கிழக்கிலிருந்து வலுவான ஈரப்பத மிகுந்த கடல் காற்றை நமது கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மோத செய்து அப்பர்,கோதையார் மலையில், அதுபோல  கன்னியாகுமரி மாவட்டத்தை சூழ்ந்து வானுயர்ந்து நிற்கும்  மலைகளில்  வலுவான மேகங்களை உருவாக்கும் என்றும் அதுபோல ஆரல்வாய்மொழி கணவாய் வழியாக கிழக்கிலிருந்து ஊடுருவும் ஈர காற்றும் தன் பங்கிற்கு வேளிமலை தொடரில் வலுவான மேகங்களை கன்னியாகுமரி மாவட்டத்தின் மத்திய பகுதியில் உருவாக்கும் என்றும் இதனால் நல்ல வாய்ப்பு புதன்கிழமை அனைத்து பகுதிகளிலும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாளை 11/3/2025 மண்டைக்காடு பகவதிஅம்மன் கோயில் இறுதிநாள் திருவிழா  என்பதாலும் கடை வைத்து இருப்பவர்கள் கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது ,கடல் பகுதியில் 11,12,13 தேதிகளில் சூறைகாற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் போவதை இந்த தேதிகளில் தவிர்ப்பது நல்லது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.