ஓயாத தொல்லை... குரங்குகளை கொன்று சமைத்து சாப்பிட்ட 2 பேர்!
Dinamaalai March 11, 2025 02:48 AM


 
திண்டுக்கல் மாவட்டத்தில்  தவசிமடை வீரசின்னம்பட்டியில் வசித்து வருபவர்  ராஜாராம் . 33 வயதான  இவரது தோட்டத்தில் குரங்குகள் தொல்லை இருந்து கொண்டே இருந்தது. இதனால் கடும் அவதிப்பட்டார்.   அதைக் கட்டுப்படுத்த வடுகம்பட்டியைச் சேர்ந்த ஜெயமணி (31) என்பவருடன் சேர்ந்து நாட்டுத் துப்பாக்கியால் குரங்குளை சுட்டு வேட்டையாடிவிட்டார். அதன் பிறகு சுட்டு வீழ்த்திய 2 குரங்குகளை சமைத்தும் சாப்பிட்டுள்ளனர்.


இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. திண்டுக்கல் வனச்சரக அலுவலர் மதிவாணன் தலைமையில் வனப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றுவிசாரணை நடத்தினர்.  அங்கு நடத்திய சோதனையில், 2 குரங்குகளை வேட்டையாடி, அதன் தோல்களை தோட்டத்தில் புதைத்து வைத்திருந்து தெரியவந்தது.

இதையடுத்து, ராஜாராம், ஜெயமணி ஆகிய இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது. அத்துடன் வேட்டைக்குப் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் குரங்கு தோல்களை பறிமுதல் செய்தனர்.

 

 

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.