பீகார் மாநிலத்தில் பிரபல நகைக்கடை அமைந்துள்ளது. இந்த நிலையில் பட்டபகலில் கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். அவர்கள் கொள்ளையடித்துவிட்டு ஹேப்பி ஹோலி என வாழ்த்து கூறி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரும், கைரேகை நிபுணர்களும் கடையில் இருந்த தடையங்களை சேகரித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர். துப்பாக்கி முனையில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.