இன்று முதல் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடக்கம்!
Dinamaalai March 10, 2025 08:48 PM

தமிழகத்தில் இன்று மார்ச் 10ம் தேதி திங்கட்கிழமை முதல் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து கொண்டிருக்கும் திரைப்படம்  ‘ஜெயிலர் 2’. இதன் அறிமுக ப்ரோமோவை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.  

இதன் படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவுள்ளது. காலையில் பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இதன் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது. 

இதில் நடித்த அனைவருமே 2ம் பாகத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  சில புதிய கதாபாத்திரங்களையும் இணைத்துள்ளார் இயக்குநர் நெல்சன். தமிழ்நாடு, கேரளா, ஹைதராபாத், மும்பை உட்பட  பல மாநிலங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.  முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களே இதிலும் பணிபுரிய இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.