தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் பிரபலமான புகழ்பெற்ற நடிகை தான் தமன்னா. தனது 13 ஆம் வயது முதல் நடிக்க ஆரம்பித்தார் தமன்னா. தற்போது 75 படங்களுக்கு மேல் நடித்து புகழ்பெற்ற நடிகையாக இருக்கிறார்.
2005 ஆம் ஆண்டு ஹிந்தி மொழி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் தமன்னா. அதைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து வியாபாரி, கல்லூரி போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2009 ஆம் ஆண்டு தனுசுடன் இணைந்து படிக்காதவன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் தமன்னா.
அதைத்தொடர்ந்து பையா, அயன், கண்டேன் காதலை, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, தோழா, அரண்மனை 4 போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார் தமன்னா.
அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியான நடிகையாக இருந்து வருகிறார் தமன்னா. ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட தமன்னா நான் நடிக்கும்போதே இந்த படம் சரியாக போகாது என்று தெரியும் என்று கூறியிருக்கிறார். அதைப் பற்றி இனி காண்போம்.
தமன்னா கூறியது என்னவென்றால், விஜயுடன் இணைந்து நான் சுறா திரைப்படத்தில் நடித்தேன். அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் Cringe ஆக இருக்கும். எனக்கு அது நடிக்கும் போதே தெரியும் இந்த கதாபாத்திரம் அவ்வளவாக சரியாக போகாது என்று நினைத்து. அதே போல் அந்த படம் எனக்கு பெயர் பெற்று தரவில்லை. அதற்குப் பிறகு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவே கூடாது என்ற முடிவு செய்துவிட்டேன் என்று ஓபனாக பேசியிருக்கிறார் தமன்னா.