என்னை எல்லோரும் இசை கடவுள் என்று சொல்லும் போது இதுதான் தோன்றுகிறது… மனம் திறந்த இளையராஜா…
Tamil Minutes March 10, 2025 08:48 PM

இளையராஜா இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார் இளையராஜா.

தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை ஆகியவற்றில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர் இளையராஜா. சிறந்த இசை அமைப்பாளர்கான தேசிய விருதினை நான்கு முறை பெற்று இருக்கிறார். இவரது தம்பி கங்கை அமரன் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் இயக்குனராகவும் பணிபுரிந்தவர்.

மேலும் இளையராஜா அவர்களின் மகன் கார்த்திக் ராஜா ஒரு இசையமைப்பாளர் மற்றும் யுவன் சங்கர் ராஜா பிரபல புகழ்பெற்ற இசையமைப்பாளர் மற்றும் இவரது மறைந்த மகள் பவதாரிணி கூட சிறந்த பாடகி ஆவார். தற்போது தான் உருவாக்கிய சிம்பொனியை லண்டனில் வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளார் இளையராஜா. ரசிகர்கள் எல்லோரும் அவரை இசை கடவுள் என்று அழைக்கின்றனர். அதை பற்றி இளையராஜா ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.

இளையராஜா கூறியது என்னவென்றால், ரசிகர்கள் எல்லோரும் என்னை இசை கடவுள் என்று அழைக்கும் போது எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றுகிறது. கடவுளை இளையராஜா அளவிற்கு இறக்கி விட்டீங்களேப்பா… என்று தான் எனக்கு தோன்றும் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் இளையராஜா.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.