“இஞ்சி இடுப்பழகி” பாடலை மகளோடு சேர்ந்து அழகாக பாடும் லிவிங்ஸ்டன்… வைரலாகும் வீடியோ…!!
SeithiSolai Tamil March 10, 2025 08:48 PM

தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ மற்றும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் லிவிங்ஸ்டண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் திரைக்கதையும் எழுதியுள்ளார். குறிப்பாக இவர் நடித்த சுந்தர புருஷன், சொல்லாமலே மற்றும் என் புருஷன் குழந்தை மாதிரி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவை.

இவரது மகள் ஜோவிதா. இவர் சின்னத்திரையில் ‘அருவி’, ‘மவுனம் பேசியதே’ போன்ற
தொடர்களில் கதாநாயகியாக நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது வெள்ளித்திரையிலும் ஜோவிதா அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜோவிதா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் தற்போது தனது தந்தையுடன் சேர்ந்து பாட்டு பாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.