சென்னை மாவட்டம் கீழ்பாக்கம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த பெண் அக்காள் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் பராக்கா சாலையில் நடந்து சென்ற போது திடீரென வந்த வாலிபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கத்தி கூச்சலிட்டார். உடனே வாலிபர் பெண்ணை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் சிவகாமிபுரம் சேர்ந்த பிரேம் என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் மீது ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு பிரேமை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.