எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தனது ஸ்டார் லிங்க் செயற்கைக் கோள்கள் மூலம் உலகளவில் இணைய சேவைகளை வழங்கி வருகிறது.
இந்தச் சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக, தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லுடன் ஸ்பேஸ் எக்ஸ் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், "இந்த ஒப்பந்தம், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை வழங்குவதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கான முதல் நடவடிக்கையாகும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஸ்டார்லிங்க் உபகரணங்களை ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், இந்த விதிமுறைகளை ஏற்று உரிமம் பெறுவதற்கான நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியான நிலையில், முதற்கட்டமாக ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஏர்டெல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி, விரைவில் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.