பண்ணையார் கூட்டத்திற்கு விரைவில் மக்கள் பதிலளிப்பார்கள் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
Seithipunal Tamil March 12, 2025 09:48 AM

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நாங்குநேரியில் நன்றாக படித்ததாக சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்ட சின்னத்துரை!

சிவகங்கையில் புல்லட் ஒட்டியதற்காக கைகள் வெட்டப்பட்ட அய்யாச்சாமி!

வேங்கைவயலில் குடிக்கும் நீரில் மலம் கலந்த வேதனையான விவகாரம்.
பின்னர் அதற்காக பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டது மற்றுமொரு அநீதி!

மதுரையில் 17 வயதுடைய தலித் மாணவரை மற்றொரு சாதியை சேர்ந்தவர்கள் காலில் விழ வைத்தும்-சிறுநீர் கழித்தும் நிகழ்த்தப்பட்ட சாதிய பெருங்கொடுமை!

இந்த வரிசையில் கபடியில் நன்றாக விளையாடிதற்காக பேருந்தில் ஏறி தலித் மாணவரை கீழே கொண்டு சென்று கொடூர தாக்குதல் நடத்தி கொலை முயற்சிக்கு நடந்தேறியுள்ளது.

எங்கிருந்து வருகிறது இந்த ஆணவம்?
யார் தந்தது இவ்வளவு தைரியம்?

திமுக ஆட்சியில் சாதிய வன்கொடுமைகளுக்கென்று ஒரு தனி புத்தகமே போடும் அளவிற்கு தினந்தோறும் வன்கொடுமைகள் நிகழ்ந்து வருகிறது!
திறமையற்ற முதல்வரின் ஆட்சியில் சாதிய மோதல்கள் அதிகமுள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது!

இவற்றை தடுக்க வேண்டிய அரசு முதல்வர் பிறந்தநாள் விழா என்ற பெயரில்‌ கேளிக்கை நடத்தி கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகளோ கண்டும் காணாதது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

அவர்களின் வாக்குகளை அறுவடை செய்யும் நேரத்திற்கு‌ மட்டும் வரும் பண்ணையார் கூட்டத்திற்கு விரைவில் மக்கள் பதிலளிப்பார்கள்" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.