பிரதமர் நரேந்திர மோடி 02 நாட்கள் அரசு முறை பயணமாக இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு தேசமான மொரிஷியஸ் சென்றுள்ளார்
அந்நாட்டின் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அழைப்பின் பேரில் அந்நாட்டின் 57-வது தேசிய நாளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதற்காக மோடி அங்கு சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது.
அந்நாட்டின் குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் மற்றும் அவரின் மனைவி பிருந்தா கோகூல் ஆகியோரைச் பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அவர்களுக்கு கும்பமேளா திரிவேணி சங்கமத்தின் நீரை பரிசளித்த்துள்ளார்.
முதல் முறையாக மொரிஷியஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியப் பெருங்கடலின் 'ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்ட் கீ ஆப் தி ஆர்டர் ஆப் தி கிராண்ட் கமாண்டர்' ஆகிய நாட்டின் உயரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது. குறித்த உயரிய விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற சிறப்பையும் இதன் மூலம் பிரதமர் மோடி பெறுவார். அத்துடன், இது பிரதமர் மோடி பெறும் 21 வது சர்வதேச விருது என்பதும் குறிப்பிடத்தக்கது.