தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று கண்டிப்பாக முதல்வராவேன் என்று கூறி வருகிறார். ஆனால் கட்சி தொடங்கிய இரண்டு வருடத்தில் எப்படி முதலமைச்சர் ஆக முடியும் என்று தமிழக அரசியல் கட்சிகள் அவரை விமர்சிக்கின்றனர். இந்த நிலையில் கொங்குநாடு தேசிய கட்சி தலைவரும் எம்எல்ஏவும் ஆன ஈஸ்வரன் தற்போது விஜயை விமர்சித்துள்ளார். இவர் திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இங்க ஒருத்தர் சொல்றாரு எகிறி குதிச்சாலே முதலமைச்சர் நாற்காலியில் தான் குதிப்பாராம். அவரு தப்பா புரிஞ்சு வச்சிருக்காரு. கடந்த 2021 ஆம் ஆண்டு பிரசாந்த் கிஷோரை திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் வியூக வகுப்பாளராக நியமித்தது. அவருக்கு அந்த வேலை மட்டும்தான் கொடுக்கப்பட்டது.
எப்போதாவது அவரை மேடையில் உட்கார வைத்து நாம் பேச சொன்னோமா. நீ அவரைப் பேச வைத்து கேவலப்பட்டு போனல்ல. அந்த ஆளு கையெழுத்து போட மாட்டேன்னு சொல்லிட்டாரு. அதை நாம எல்லோரும் பார்த்தோம். எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் பிரசாந்த் கிஷோரை அழைத்து அவருக்கு பீஸ் கொடுத்து முதலமைச்சர் நாற்காலியை விற்பனைக்கு வைத்திருக்காராம். அவருக்கு பீஸ் கொடுத்தால் இவர் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார முடியும் என்று நினைக்கிறார். அவருக்கு இவ்வளவு தான் புரிதல். அப்படிப்பட்டவர்கள் இன்று தமிழ்நாட்டை பாதுகாக்க வந்துள்ளார்களாம். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நம்முடைய முதலமைச்சர் வைத்துள்ள இலக்குபடி 200 தொகுதிகளுக்கும் மேல் நம்முடைய கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்.