இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதில் சில வீடியோக்கள் ஆச்சரியப்பட வைப்பதாகவும் சில வீடியோக்கள் இப்படி கூட செய்ய முடியுமா என்ற எண்ணத்தை நமக்குள் வரவழைக்கும் விதமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.
அதாவது அலுவலகத்தில் வேலை புரியும் ஒருவர் அவசரமாக பேப்பர்களில் ஸ்டாம்ப் அடிக்கிறார். அவர் கம்ப்யூட்டரை விடவும் மிகவும் ஸ்பீடாக ஸ்டாம்ப் அடித்துக் கொண்டிருக்கிறார். இதைப் பார்க்கும்போது எப்படி அவரால் மட்டும் இது முடிகிறது என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நிலையில் அவருக்கு பல வருட அனுபவம் இருந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.