திருவள்ளூர் அருகே நடைபெற்ற திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, ஒரு மாநில அரசு நாட்டிற்கே எடுத்துக்காட்டாக இருந்தால், அந்த மாநில அரசுக்கு துணை நிற்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை.
ஆனால், பாஜக அரசு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடைபோடுகிறதே என்ற பொறாமையோடு செயல்படுகிறது. தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் திமுக காவலாக இருக்கிறதே என்ற எரிச்சலோடு உள்ளது. ஒன்றிய அரசு நம்மை சிறுமைப்படுத்தப் பார்க்கிறது. பதவி சுகத்திற்காக ஒன்றிய அரசிடம் பணிந்து போகும் முதுகெலும்பில்லாத அடிமைக் கூட்டமல்ல நாம் என்று தெரிவித்தார்.