பிரபல ரவுடி வசூல்ராஜா கொலை - கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது.!
Seithipunal Tamil March 12, 2025 11:48 PM

காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி வசூல்ராஜா வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. இந்தக் கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த மூன்று கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரை போலீசார் பிடித்துள்ளனர். 

அவர்களிடம் போலீசார் கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரவுடி வசூல்ராஜா இரண்டு கல்லூரி மாணவர்களை தாக்கியும், பெண் தொடர்பாகவும் அவர் பிரச்சனையில் ஈடுபட்டு உள்ளார். 

இந்த தகராறில் ரவுடி வசூல் ராஜா கொலை செய்ததாக பிடிபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் போலீசாருக்கு மாணவர்களிடம் எப்படி வெடிகுண்டு கிடைத்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து போலீசார் அவர்களுக்கு பின்னால் ரவுடி கும்பல் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பிடிபட்டவர்களிடம் முழுமையாக விசாரணை முடிந்த பின்னரே வசூல்ராஜாவின் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.