எல்லோர்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் தமிழ்நாடு பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
WEBDUNIA TAMIL March 14, 2025 09:48 PM

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. இதில், 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் வாசிப்பு சுமார் 2 மணி 38 நிமிடங்கள் நீடித்தது.

பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "இந்த ஆண்டு பட்ஜெட், தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது" என கூறினார்.

மகளிர் நலன், தொழில் முன்னேற்றம், இளைஞர்களுக்கான உயர்தொழில்நுட்ப வசதிகள், தொழிற்பூங்காக்கள், புதிய நகரங்கள், புதிய விமான நிலையங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் அதிவேக ரயில் சேவையை உருவாக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

"எல்லோர்க்கும் எல்லாம்" என்ற உயரிய நோக்கில், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்" எனவும் முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.