ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, ஓரிசேரிபுதூர் பகுதியில் வசித்து வருபவர் பாட்டப்பன் (65). இவர் அப்பக்கடல் பஞ்சாயத்தில், தற்காலிக மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியின் ஆபரேட்டராக இருந்து வருகிறார்.
இருசக்கர வாகனத்தில் நேற்று அதிகாலை சுமார் 05:30 மணிக்கு மேல், சக்தி சுகர்ஸ் காலனிக்கு தண்ணீர் திறந்துவிட சென்றார். இவரின் இருசக்கர வாகனம் தபால் அலுவலகம் அருகே சென்றது. அச்சமயம், மூங்கில் பாரம் ஏற்றிவந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த பாட்டப்பன், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த அப்பக்கடல் காவல்துறையினர், பாட்டப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறையான லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:
இதையும் படிங்க: