ஒரே நாடு ஒரே தேர்தல் அறிமுகப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் கூறியுள்ளார். ராஜஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது தேசிய நலனுக்கானது என்று குறிப்பிட்ட அவர். 1952, 1957, 1962 மற்றும் 1967-ம் ஆண்டுகளில் பாராளுமன்ற மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த முயற்சி தேசிய நலனுக்கானது என்றும், தேர்தல் ஆணையம், நிதி ஆயோக் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு ஆகியவை தங்கள் ஒப்புதலை அளித்தன. அதன்பிறகு அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்தது என்றும் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஒரே நேரத்தில் தேர்தல்களை முன்மொழியும் இரண்டு மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு பாராளுமன்ற குழுவால் பரிசீலிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன என என்று சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.