2026 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை தொடக்கம்..!
Seithipunal Tamil March 16, 2025 12:48 PM

நாட்டின் குடியரசு தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் அறிவிக்கப்படும்.  நாட்டின் உயரிய விருதான இந்த விருத்தானது கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

குறித்த இனம், தொழில், பதவி, பாலின வேறுபாடின்றி அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில் 2026-ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று தொடங்கப்பட்டது. எதிர்வரும்  ஜூலை 31-ந் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேசிய விருதுகள் இணையதளமான https://awards.gov.in என்ற தளத்தில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.

இது தொடர்பான விரிவான விவரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளமான https://padmaawards.gov.in என்ற தளத்திலும் உள்ளன. விருதுகள் தொடர்பான விதிகள் இணையதளத்தில் https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளன . இந்த தகவல்களை உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.