பொதுவாக உடல் எடையை அதிகரிக்க விரும்புவோருக்கு பல வழிகள் உள்ளது .உடல் எடையை குறைக்க பலர் முயற்சி எடுத்து வருகின்றனர் .ஆனால் உடல் எடையை கூட்ட ஒல்லியாக இருப்போர் முயற்சி எடுப்பதில்லை .ஆனால் பின் வரும் உணவு முறையை கையாண்டு வந்தால் உடல் எடை அதிகரிக்க வழியுள்ளது .அந்த எளிய வழிகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.முட்டையில் அதிகமான புரத சத்து (Protein) உள்ளது தினமும் 1 அல்லது 2 முட்டை எடுப்பதன் மூலம் 15 முதல் 20 நாட்களில் உடல் எடையை அதிகரித்து நல்ல திடகாத்திரமான தோற்றத்துடன் இருக்கலாம் .
2.வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளது பச்சைப்பழம், செவ்வாழைபழம், நாட்டுப்பழம் இதில் அதிகமாக சத்து நிறைந்த செவ்வாழைப் பழத்தில் அதிகப்படியான கலோரி(Calories) உள்ளது. இதனால் உடல் எடை எளிமையாக அதிகரித்து நம் ஒல்லியான தேகமும் மாறி விடும்
3.பாலை தினமும் 1-2 Glass பால் குடிப்பதாலும், உடல் எடையை கூட்டலாம்
4.மேலும் பால் வகையான தயிர், மோர், நெய், வெண்ணெய் இவைகளை உணவில் தினமும் சேர்ப்பது உடல் குண்டாக வழி ஏற்படுத்தி கொடுக்கும்
5.ஒல்லியானவர் குண்டாக கிழங்கில் உருளை, சக்கரவள்ளி, மரவள்ளி போன்றவற்றில் அதிகமான சத்து உள்ளது. இதனால் உடல் எடையை அதிகரித்து ஆரோக்கியமாக வாழலாம் .