மகளிர் ஐபிஎல் போட்டி 2025; டெல்லியை வீழ்த்தி, இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி..!
Seithipunal Tamil March 16, 2025 12:48 PM

மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை  தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 07 விக்கெட்டுக்கு 149 ரன்கள் குவித்தது. அணியின் சார்ப்பாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 44 பந்தில் 66 ரன் குவித்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து நாட் ஸ்கைவர் பிரண்ட் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.

150 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே முன்னணி வீராங்கனைகள் ஆட்டமிழந்தனர்.அதில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30 ரன் எடுத்தார். மற்றவர்கள் பெரிதாத நிலைத்து ஆடவில்லை. 
அணியின் வெற்றிக்காக மரிசான் காப் கடைசி வரை போராடி, 26 பந்தில் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இறுதியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 08 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி  இரண்டாவது முறையாக கோப்பை கைப்பற்றியுள்ளது. 
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.