மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பவாய்ப்பகுதியில் ஒரு ஹோட்டலில் பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுத்த ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் பவாய் காவல்துறையினர் அந்த ஹோட்டலில் மறைந்திருந்து பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய கும்பலை கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் இந்தி தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகை என தெரிய வந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மூவர் திரைத்துறையில் சிறிய சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டு வாய்ப்புகள் தேடி போராடிக் கொண்டிருந்த பெண்கள் என தெரியவந்துள்ளது. இதன் பின்னர் 4 பெண்களையும் காவல்துறையினர் மீட்டனர்.
இதனை அடுத்த விசாரணையில் நான்கு பேரையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற நபரின் பெயர் ஷாம் சுந்தர் அரோரா என்பது தெரியவந்தது. ஷாம் சுந்தர் மற்றும் அவரது உதவியாளர்கள் கைது செய்யப்பட்டு பவாய் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.