தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர் ரகுமான். இவர் இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளர். ஆஸ்கார் விருது வென்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு தற்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைபிரிவில் ஏ.ஆர் ரகுமான் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் மருத்துவமனை சார்பில் பின்னர் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.