ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு கோரிக்கை: ஆட்டோ டிரைவர்கள் 19ம் தேதி வேலைநிறுத்த போராட்டம்!
WEBDUNIA TAMIL March 16, 2025 04:48 PM

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுனர் கூட்டமைப்பு ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை - செங்கல்பட்டு ஆட்டோ ஓட்டுனர்கள் யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆட்டோ சங்கங்ஜ்கள் வைத்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டு 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.50ம், அடுத்தடுத்த கிலோ மீட்டருக்கு ரூ.25ம் நிர்ணயித்து பரிந்துரை வழங்கியது. ஆனால் ஓலா ஊபர் உள்ளிட்ட ஆப் நிறுவனங்கள் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.76 வசூலித்து ஆட்டோ பயணிகளை கொள்ளையடிக்கின்றன.

இந்த நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி ஆணையிடவும், அரே ஒரு ஆட்டோ புக்கிங் செயலியை தொடங்கவும் வலியுறுத்தி 19ம் தேதி ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.