உஷார்... இன்று 21 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!
Dinamaalai March 17, 2025 01:48 PM

பத்திரம் மக்களே... கடைசி நேர பரபரப்புக்கு உள்ளாகாதீங்க. இன்று மார்ச் 17ம் தேதி சென்னை சென்ட்ரல் - சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கும் 21 புறநகர் மின்சார ரயில்கள் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் வழித்தடங்களில் மாா்ச் 17ம் தேதி காலை 9.25 முதல் பிற்பகல் 2.25 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால் சென்ட்ரலிலிருந்து இன்று மாா்ச் 17ம் தேதி காலை 5.40, 8.45, 10.15-க்கு சூலூா்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரயில்களும், காலை 8.05, 9.00, 9.30, 10.30, 11.35-க்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

மறுவழித்தடத்தில் சூலூா்பேட்டையிலிருந்து காலை 10, 11.45, பிற்பகல் 12.35, 1.15 -க்கும், கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 9.55, 11.25, பகல் 12, பிற்பகல் 1 மணிக்கும் சென்ட்ரல் வரும் ரயிலும் ரத்து செய்யப்படும்.

அதேபோல் கடற்கரையிலிருந்து காலை 9.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில், மறுவழித்தடத்தில் கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 10.55 மணிக்கு கடற்கரை செல்லும் ரயில் உட்பட மொத்தம் 21 ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

மறுவழித்தடத்தில் பொன்னேரியில் இருந்து பகல் 12.18-க்கும், மீஞ்சூரிலிருந்து காலை 11.56, பிற்பகல் 1.31 மணிக்கும் சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.