விஜய்சேதுபதி படத்தின் படப்பிடிப்புல நடந்த அதிசயம்..! இப்படியும் நடக்குமா?
CineReporters Tamil March 17, 2025 04:48 PM

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற படம் மகாராஜா. தொடர்ந்து விடுதலை படத்தின் இரு பாகங்களிலும் நடித்தார். தொடர்ந்து இப்போது ஏசிஇ மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் டிரெய்ன் படங்களில் நடித்து வருகிறார். பசங்க இயக்குனர் பாண்டிராஜூடன் முதல் முறையாக இணைந்து படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான அப்டேட்கள் என்னன்னு பார்க்கலாமா...

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி படத்தில் நடிக்கிறார். அந்தப் படம் இயக்குனர் பாண்டிராஜூக்குத் திருப்புமுனையாக அமைந்ததா என்று ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் பாண்டிராஜூக்கு மட்டும் இல்ல. விஜய் சேதுபதிக்கே திருப்புமுனையைக் கொடுக்குற படமாகத் தான் இருக்கும்னு நான் நினைக்கிறேன். அந்தளவுக்கு உணர்ச்சிகரமான காட்சிகளை அமைத்துள்ளார் படத்தின் இயக்குனர் பாண்டிராஜ்.


அந்தப் படத்தின் படப்பிடிப்புல நானும் கலந்து கொண்டேன். ஒரு உணர்ச்சிமயமான காட்சியில் விஜய்சேதுபதியும், நித்யா மேனனும் நடித்தபோது அந்தப் படப்பிடிப்பு தளத்துல பலபேரின் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்ததை என்னால் பார்க்க முடிந்தது என்கிறார் சித்ரா லட்சுமணன்.

2024ல் மகாராஜா படம் இங்கு மட்டும் அல்லாமல் சீனா வரை சென்று அங்கும் நல்ல வசூலை ஈட்டியது. மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். படத்தின் கதையும் மாஸாக இருந்தது. அந்த வகையில் விஜய் சேதுபதி படங்களின் வெற்றிக்குக் காரணம் அவர் கதையைத் தேர்ந்தெடுக்கும் விதம்தான். அவருக்கு ஒத்து வருகிற கேரக்டர்களில் தான் அவர் நடிக்கிறார். இதனால் அவரது அடுத்தடுத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

அதனால் அவரது படங்கள் எளிதில் ரசிகர்களைச் சென்று அடைகின்றன. விஜய்சேதுபதி சினிமாவில் மட்டும் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் எத்தனையோ எதிர்ப்புகள் இடையிடையே வந்தாலும் திறம்பட செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.