சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நள்ளிரவு பிரபல ரவுடிகள் 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோட்டூர்புரத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான அருண் (25) மற்றும் அவருடைய நண்பரும் ரவுடியுமான சுரேஷ் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் நேற்று இரவு மது போதையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே படுத்திருந்தனர். அப்போது சுமார் இரவு 10 மணி அளவில் 8 பேர் கொண்ட கும்பல் ஒரு வாகனத்தில் அங்கு வந்தது.
அவர்கள் மது போதையில் இருந்த அருண் மற்றும் சுரேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் படப்பை சுரேஷ் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அருணும் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தன்னுடைய காதலியை கொலை செய்ததற்காக சுரேஷை பழிவாங்க அருண் திட்டமிட்டு இருந்த நிலையில் சுரேஷ் முந்திக்கொண்டு அருணை கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.